கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரி விதிப்பு கொள்கைகள் தேசிய கருத்தரங்கு..

இராமநாதபுரம், ஆக.9- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலை வணிகவியல் துறை சார்பில் தேசிய அளவிலான வரிவிதிப்பு, அதன் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜ சேகர் தலைமை தாங்கினார். வருமான வரி, அதன் சட்டப்பிரிவு, தனிநபர் வருமான வரி, வருமான வரிச் சலுகை, வருமான வரி கணக்கீடு குறித்து வருமான வரி அலுவலர் பாலகுமார் பேசினார். இந்திய அரசு விதிக்கும் வரிகளில் 2 வகை வரி மிக முக்கியமானது. நேரடி வரி விதிப்பு, மறைமுக வரி விதிப்பு முறை. வருமான வரி நேரடி வரியின் கீழ் வருகிறது. இதை மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் காண்காணிக்கிறது. நிதி அமைச்சகத்தின் அங்கமான வருவாய் துறையின் கீழ், மத்திய நேரடி வரிகள் வாரியம் செயல்படுகிறது என முஹமது சதக் பொறியியல் கல்லூரி மேலாண் துறை பேராசிரியர் அப்பாஸ் மாலிக் பேசினார். முதுகலை வணிகவியல் துறையின் நோக்கம் மற்றும் செயல்பாடு குறித்த இலட்சினையை (லோகோ) பாலகுமார், அப்பாஸ் மாலிக் வெளியிட கல்லூரி முதல்வர் ராஜசேகர், துறைத் தலைவர் செல்வ கணேசன் பெற்றுக் கொண்டனர். வணிகவியல் துறையின் அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் வரவேற்பு, உபசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. வணிகவியல் துறையின் மாணவ ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ராஜ் மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர்கள் ஏற்பாடு செய்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!