திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர் பாலகிருஷ்ணன் (54). இவர் கடந்த 12ம் தேதி இரவு பணி பார்த்தபொழுது, ஸ்டேஷனில் இரவுப் பணியில் இருந்த முதல்நிலை காவலர் சசிகலா வயது 34, என்பவருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு ஏதேச்சையாக வந்த தனிப்பிரிவு ஏட்டு கேசவனிடம் சசிகலா புகார் தெரிவித்து உள்ளார் தனிப்பிரிவு ஏட்டு சசிகலா புகாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி இவர்கள் இருவரும் ஸ்டேஷனில் முத்தங்களை பரிமாறிக் கொண்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி:- ஜெ.அஸ்கர் – திண்டுக்கல்


You must be logged in to post a comment.