கீழக்கரை அருகே மாயாகுளத்தில் வெளிச்சம் தொண்டு நிறுவனம் சார்பாக மகளிர்க்கான இலவச தையல் பயிற்சி முகாம் 26.02.2017 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரை காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை வாங்கினார். இந்த நிழச்சிக்கு வெளிச்சம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அற்புதகுமார் தலைமை ஏற்றிருந்தார்.




திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் குமார் வரவேற்புரை பேசினார். அம்பேத்கார் நகர் தலைவர் தர்மலிங்கம், நாடார் பேட்டை தலைவர் KRD கிருஷ்ணமூர்த்தி, கோவில் தர்மகர்த்தா தர்மலிங்கம், பாரதி நகர் மீனவர் சொசைட்டி தலைவர் ரவி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தலைவர் பானுமதி கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நன்றியுரையை தையல் பயிற்றுனர் செல்வராணி வழங்கினார்.

இது குறித்து வெளிச்சம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அற்புதகுமார் நம்மிடையே பேசுகையில் ”கீழக்கரை நகரிலும் விரைவில் இது போன்று மகளீருக்கான இலவச தையல் பயிற்சி துவங்க தகுந்த இடத்தை தேர்வு செய்து கொண்டிருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









