கீழக்கரை 18 வது வார்டு நடுத் தெரு ஜும்மா பள்ளிவாசல் பின் புற பகுதியில் இன்று 05.03.17 அதிகாலை முதல் சாக்கடை நதி பெருக்கெடுக்க துவங்கியுள்ளது. கமகமக்கும் வாசனையோடு வழிந்தோடும் இந்த சாக்கடை நதியினை கடந்து செல்லும் முதியவர்களும், பள்ளிக் குழந்தைகளும், பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.



இந்த பகுதியில் அடிக்கடி இது போன்று தொடரும் சாக்கடை நீரோட்டத்தால் பகுதி மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களின் கூடாரமாக திகழும் கீழை மாநகரில் இது போன்ற சாக்கடை சங்கமங்கள் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.



One thought on “கீழக்கரை நடுத் தெருவில் வழிந்தோடும் சாக்கடை நதி – பொதுமக்கள் நிலை தடுமாறி நீந்தி செல்லும் அவலம்”
Comments are closed.