செங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் தரிசு நிலத்தில் பயிர் சாகுபடி அறிமுகம்

செங்கம் அடுத்த புதுப்பாளையம் வேளாண்துறை சார்பில் ஏழை ஒரு கிராமத்தில் தரிசு நிலத்தில் பயிர் சாகுபடி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயப்படாமல் தரிசாக உள்ள நிலத்தில் பயிர் சாகுபடி செய்யும் முயற்சியில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி புதுப்பாளையம் அடுத்த இறையூர் கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை பயிர் சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றும் திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டது. அதன்படி பரிசாக உள்ள நிலத்தில் வளர்ந்துள்ள மரங்களை அகற்றி நிலத்தை சமன்படுத்த உழவு செய்யவும் நிலக்கடலை விதை மற்றும் உரங்கள் வாங்குவதற்காக 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூபாய் 18 ஆயிரம் மானியம் வழங்கப்படுகின்றது .இந்த திட்டத்தை புதுப்பாளையம் வேளாண்துறை உட்பட எங்கள் கிராமத்தின் திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இயக்குனர் முருகன் தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியின்போது வேளாண் துணை இயக்குனர் ஏழுமலை, உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ,வேளாண் அலுவலர் ராஜலட்சுமி, துணை வேளாண் அலுவலர் வேலு, உதவி அலுவலர் சிவக்குமார் உட்பட விவசாயிகள் உடனிருந்தனர்

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!