வேட்டவலம் பகுதியில் 12 இடங்களில் பாஜக சார்பில் கொடியேற்று விழா

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஒன்றியம், கீழ்பெண்ணாத்தூர் தெறகு ஒன்றியத்தின் சார்பில் கீரனூர் பசங்கரை ஆங்குணம் பன்னையூர் ஓலைப்பாடி வைப்பூர் சொரத்தூர் அனுக்குமலை நெய்வானத்தம் வயலூர் சாணிப்பூண்டி ஆகிய இடங்களில் கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் தலைமையில் நடந்தது. ஒன்றிய தலைவர் சிவக்குமார் பொதுச் செயலாளர்கள் உமா சங்கர் சாய் ஜீவா துணைத்தலைவர்கள் ராஜா முருகன் ஆங்குணம் பிரகாஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர் தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மேயரும் மாநிலசெயலாளருமான கார்த்தியாயினி கலந்துகொண்டு கொடியேற்றி பேசினார் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன் பொதுச் செயலாளர்கள் சதீஷ் ரமேஷ் சேகர் மாவட்ட செயலாளர்கள் சந்திரசேகர் கிருஷ்ணமூர்த்தி சுந்தரமூர்த்தி பிச்சாண்டி பானுநிவோதா மாவட்ட துணைத்தலைவர் முருகன் பட்டியல் பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் விஜயராஜ் மாவட்ட மகளிர் அணித் தலைவி மலர்கொடி மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர் விழா முடிவில் அன்னதானம் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!