செம்பனார்கோவிலில் பேரறிஞர் அண்ணா 112 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவ சிலைக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் பி.எம். அன்பழகன்,அப்துல்மாலிக், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், ஒன்றிய துணை பெருந்தலைவர் பாஸ்கர், தரங்கை நகர செயலாளர் வெற்றிவேல், தகவல் தொடர்பு அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதன் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது,இதேபோல் செம்பனார்கோவிலில் நடைப்பெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு அவருடைய உருவ படத்திற்கு மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் வி.ஜி.கே .செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயபாலன், ரெங்கநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதன் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


You must be logged in to post a comment.