வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமாக திருவண்ணாமலை இருந்து வருகிறது.ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி புகழாரம்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவாறு மாவட்டத்தில் , பொதுப்பணி, தோட்டக்கலை, பால்வளம் ஆகிய துறைகளின் சார்பில் ரூ.17.20 கோடி மதிப்பிலான 10 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 18,279 பயனாளிகளுக்கு ரூ.134 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொதுப்பணித்துறை, இந்துசமய அறநிலையத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகளில் ரூ.51.99 கோடி மதிப்பீட்டில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் முதல்வர் பழனிசாமி கேட்டறிகிறார். ஆய்வு கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, திருவண்ணாமலை மாவட்டம் என்றாலே அண்ணாமலையார் கோவில் தான் நினைவுக்கு வரும். வேளாண் தொழில் நிறைந்த மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமாக திருவண்ணாமலை இருந்து வருகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை அதிமுக அரசு செய்து கொடுத்துள்ளது. கொரோனாவை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!