திருவண்ணாமலை மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது 58வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள விடுதலை சிறுத்தை தொண்டர்கள் நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் அம்பேத்வளவன் தலைமையில் இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்தனர். இதனை தொடர்ந்து செங்கத்தில் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பாகதலைவரின் பிறந்தநாள் விழா செங்கம் நகர செயலாளர் ஆட்டோ ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட ரத்தினம் முன்னிலை வகித்தார். பிறந்தநாள் விழாவில் 25 அடி கொடிக்கம்பம் நடப்பட்டு கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது பின்னர் 500 பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி மற்றும் நோட்டு புத்தகங்கள் நலத்திட்ட உதவிகள் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் நகர துணை செயலாளர் சத்யராஜ் நகர பொருளாளர் அமானுல்லா நகர அமைப்பாளர் அன்பு ஒன்றிய துணை செயலாளர் அறிவுச்செல்வன் மற்றும் ஆலடி மற்ற முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் நகர துணை செயலாளர் சிறுத்தை மணி நன்றி கூறினார். விழாவானது சமூக இடைவெளியுடன் அமைதியான முறையில் நடைபெற்றது.

You must be logged in to post a comment.