வழிபாட்டு தளங்கள் திறக்க அனுமதி !மத தலைவர்களுடன் தி.மலை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை.

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நடைமுறைப்படுத்துவதற்கு அதன்படி ரூ. 10 ஆயிரத்திற்கு குறைவாக உள்ள வழிபாட்டுத் தலங்களை பக்தர்கள் தரிசனத்துக்கு ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வழிபாட்டுத் தலங்களை பின்பற்றப்பட வேண்டிய ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அனைத்து மதத் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பேசும்போது: ஆண்டுதோறும் 10 ஆயிரத்திற்கு குறைவாக வருமானம் கிடைக்கும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், தர்காக்கள் ஆகியவற்றை திறக்க அனுமதித்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது .எனவே தமிழக அரசு அறிவித்துள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுவது மிகவும் முக்கியமானதாகும். மேலும் நுழைவாயில் கிருமிநாசினி கைகள் கழுவுவதற்கான வசதிகள் நிர்வாகிகள் செய்த தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!