மேல்பெண்ணாத்தூர் பள்ளி மாணவர்களுக்கு பெண் கல்வி விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரேகன்போக் இந்தியா பவுண்டேஷன் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சார்பில் பள்ளி மாணவியர்களுக்கு பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது நிகழ்விற்கு பள்ளி ஆசிரியர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.ரேகன்போக் இந்தியா பவுண்டேஷன் தன்னார்வ அமைப்பு மாணவர்கள் நடமாடும் நூலகம், மாலை நேர பள்ளிகள் பள்ளி மாணவர்களுக்காக கல்வி உதவித் திட்டம் மரம் நடுதல் என செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் பல்வேறு சேவைகள் ஈடுபடுத்தி வருகிறது இதன் தொடர்ச்சியாக வளரிளம் மாணவியர்களுக்கு பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உடல் ரீதியான பெண் கல்வி மாணவரிடையே புரிதலை விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரேகன்போக் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பயிற்சியாளர் சத்யா, வான்மதி ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நூலகர் மச்சரூபன், தலைமை நூலகர் குமரேசன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர் இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் சங்கீதா, தனலட்சுமி, மகேஸ்வரி, சாந்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!