செங்கம் பகுதியில் திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அய்யன் திருவள்ளுவர் தின விழா முன்னிட்டு செங்கம் ரெட் கிராஸ் மற்றும் செங்கம் வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டதுஉலக பொதுமறை திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2-ந்தேதி திருவள்ளுவர் தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு  அதன்படி செங்கம் ரெட் கிராஸ் மற்றும் செங்கம் வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் கல்வியாளர் மாணிக்கம் தலைமையில் ராமகிருஷ்ணா பள்ளி தலைவர் பாண்டுரங்கன் அய்யன் திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டதுவிழாவிற்கு கணேசர் குழுமத்தலைவர் கஜேந்திரன், சக்தி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் அக்ரி வெங்கடாஜலபதி, செங்கம் தமிழ்ச் சங்க தலைவர் தனஞ்செயன், டிவிஎஸ் ந தலைவர் பார்த்தசாரதி, ஆதவன், அசோக்குமார், வழக்கறிஞர் செல்வம், மற்றும் பலர் கலந்து கொண்டனர் அய்யன் திருவள்ளுவரை நினைவு கூறும் வகையில் மேல்பள்ளிப்பட்டு நெறியாளர் கிருஷ்ணமூர்த்தி திருக்குறள் பாடி அதன் விளக்கங்களும் பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். நிகழ்வில் அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!