செங்கம் நூலகர் வாசகர் வட்டத்தின் சார்பில் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம்  நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.செங்கம் முழு நேர கிளை நூலக வாசகர் வட்ட புதிய பொறுப்பாளர்கள் கல்வியாளர் சி.மாணிக்கம் தலைமையில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி அவர்களை சந்தித்து   நூலக வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர். பின்னர் வாசகர் வட்டத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கோரிக்கைகள் பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்ததுடன் அதை நிறைவேற்ற பேரூராட்சி அலுவலருக்கு பரிந்துரைத்தார் இச்சந்திப்பில் வாசகர் வட்ட தலைவர்  இரா.கிருஷ்ணகுமார், துணைத்தலைவர்கள் மணிமாறன், கி.கவியரசன், பொருளாளர் ஆசை முஷிர் அகமது, ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் சுந்தர விநாயகம்  கௌரவ தலைவர்  முருகமணி, கௌரவ குழு ஆலோசகர் அப்துல் காதர், நல்நூலகர்  கு.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!