செங்கம் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் அனைத்து தரப்பு சமுதாய மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதியாகும். இப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் தமிழக அரசின் வீடு தேடி கல்வி திட்டம் சார்பாக இப்பகுதியில் கலைநிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கொட்டாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வீடு தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஆடல் பாடல் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் ந.தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி கண்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி , ஆசிரியர் பயிற்றுனர் அன்புக்கரசி, பள்ளி ஆசிரியர்கள் செல்வி, இந்துமதி, காயத்ரி கிராம பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்


You must be logged in to post a comment.