கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு சிங்கம் தொகுதிக்குட்பட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மறைந்த முன்னாள் முதலமைச்சரும்,
சுமார் அரை நூற்றாண்டு காலம் திமுக தலைவராக இருந்தவருமான கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமையில் மேல் பெண்ணாத்தூர் ஊராட்சியில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், அண்ணாமலை ஊராட்சி மன்ற தலைவர் விஜய், மாவட்ட கவுன்சிலர் சகுந்தலா ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் விநாயகம், ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் விசாலாட்சி வெங்கடேசன், மற்றும் ஒன்றிய, நகர, கிளை திமுக தொண்டர்கள் சமூக இடைவெளி விட்டு திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், மேல்பள்ளிப்பட்டு ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் பானுமதி ஜம்புலிங்கம் மற்றும் மேல் பள்ளிப்பட்டு ஊராட்சி திமுகவினர் கலைஞர் திருஉருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் செங்கம் சரவணகுமார்

You must be logged in to post a comment.