செங்கம் அருகே அரசு அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை; நடவடிக்கை மேற்கொள்ள கிராம மக்கள் கோரிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட வன்னியர் தெருவில்  கிராமமக்கள் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் கனமழையால் காரப்பட்டு  ஊராட்சிக்கு ட்பட்ட பல்வேறு பகுதிகளில்  சாலைகள் துண்டிக்கப்பட்டு , மழைநீர்  தேங்கிய நிலையில் உள்ளது இதனால் கிராமப்புற மக்களுக்கு டெங்கு, மலேரியா என பல்வேறு நோய்கள் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் நோய்கள் தாக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் எல்.ஜெயந்தி லட்சுமணன் (எ) சீனு, பொறியாளர் அமுதா ,மற்றும்  அரசு அதிகாரிகளை   பார்வையிடும்போது முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் முற்றுகை போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் எச்சரித்தனர்.இரண்டு மணி நேரமாக தொடர்ந்த வாக்குவாதம் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சீனிவாசன் உள்ளிட்டோர் சமரசத்தில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!