பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில் குழந்தைகள் தின விழா; மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்பு.

திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் பாரத சாரண இயக்கத்தின் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது .விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாசம் , மாவட்ட ஆணையர் ஜோதிலட்சுமி, மாவட்ட நீலப்பறவை ஆணையர் பவானி ,மாவட்ட தலைமையக ஆணையர் குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பியூலா கரோலின் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்சிகள் பெண்குழந்தை அடிமைத்தனத்திற்கு எதிராக வன்முறையை கண்டித்து சிறப்பு நிகழ்ச்சியை குட்வில் மழலையர் பள்ளி குழந்தைகள் செய்து காண்பித்து அனைவரையும் அசத்தினர். மவுண்ட் செயின்ட் ஜோசப் பள்ளி, விக்னேஷ் இன்டர்நேஷனல் பள்ளி கார்மேல் பள்ளி ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளி காந்திநகர் மெட்ரிக் பள்ளி டேனிஷ் மிஷின் பள்ளி என அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகள்  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள் செல்வன் அவர்கள் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.விழாவில் செங்கம் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட பயிற்சி ஆணையர் கலைவாணி, மாவட்ட திரி சாரண ஆணையர் சுதாகர், சாரண ஆசிரியர்கள் ராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர். விழா தொகுப்புரை ரமா காவியா மற்றும் எஸ்தர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார். குருளையர் ஆசிரியை சுமதி நன்றி கூறினார்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட செயலர் பியூலா கரோலின் செய்திருந்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!