கந்து வட்டி கேட்டு அழைத்து சென்ற நபர் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள நாகப்பாடி பகுதியைச் சேர்ந்த மணியரசு என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரிடம் தீபாவளி சீட்டு நடத்துவதற்காக ரூபாய் 20 ஆயிரம் கொடுத்துள்ளார்ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் பணத்தை திரும்பத் தராததால் 20, ஆயிரம் ரூபாய்க்கு 80 ஆயிரம் வரை வட்டி சேர்த்து கந்து வட்டி கேட்டு மணியரசை சங்கர் மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் பலமுறை நேரில் சென்று பணத்தைக் கேட்டு வந்துள்ளனர் இதற்கிடையில் இதுவரையிலும் பணம் திரும்ப கிடைக்காததால் ஆத்திரமடைந்த சங்கர் தனது நண்பர் சதீஷ் யை அழைத்துக்கொண்டு நாகப்பாடி பகுதியில் உள்ள மணியரசு வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறதுஅதன் பிறகு வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சங்கர் மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் மணியரசுவை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து சங்கர் வீட்டில் தங்க வைத்து மிரட்டி உள்ளனர் சங்கர் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு வீட்டில் இருந்த பெண்களிடம் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்று வருவதாக கூறி மணியரசு வெளியே சென்று நீண்ட நேரமாக திரும்ப வராததால் உறவினர்கள் சங்கருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர் அதற்குள் மணியரசு பூச்சி மருந்து குடித்து விட்டு மீண்டும் ஷங்கர் வீட்டுக்கு வந்துள்ளார்சிறிது நேரத்தில் மணியரசு மயக்கம் அடைந்ததை கண்ட சங்கரின் குடும்பத்தினர் என்ன செய்வதென தெரியாமல் அவரை மீட்டு அருகிலுள்ள புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்அப்போது தீவிர சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை பலனின்றி மணியரசு உயிரிழந்தார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த புதுப்பாளையம் காவல்துறையினர் சங்கர் மற்றும் அவரது நண்பர் சதீஷ் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனகொடுத்த பணத்தை விட கூடுதலாக கந்து வட்டி கேட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்ற நபர் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!