திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கல்லாத்தூர் பேருந்து நிலையம் பன்ரேவ் சாலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குப்பநத்தம் முதல் பன்ரேவ் சாலை வரை கிராம சாலைகள் தரமற்ற நிலையில் உள்ளது கண்டித்து பாடை தூக்கும் போராட்டம் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வைத்து கட்சியின் சார்பில் அறிவித்திருந்தது. செங்கம் வட்ட செயலாளர் சர்தார் தலைமையில் முக்கிய மாவட்ட கட்சி நிர்வாகிகள் பாடை தூக்கும் போராட்டம் செய்ய முயன்றபோது செங்கம் வட்டாட்சியர் முனுசாமி தலைமையில் வருவாய் துறையினர் செங்கம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி சமரசத்தில் ஈடுபட்டனர் பின்னர் குப்பநத்தம் காலை முதல் மாலை வரை சீரான சாலை அமைத்து தர அரசு அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பாடை தூக்கும் போராட்டம் போராட்டத்தை கைவிட்டனர் .பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் சர்தார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குப்பநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்கடன் உடனயாக வழங்கிடவும், குப்பநத்தம் முதல் பன்ரேவ் வரை சீரான கிராம சாலை அமைத்து தரக் கோரியும், குப்பநத்தம் ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் நான்கு மாதங்களாக வழங்காததை உடனடியாக வழங்கிடவும், ரேஷன் கடைகளில் தரமான அரசியல் வழங்கிடவும் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோரிக்கைகளை முன்வைத்தனர். மாவட்ட செயலாளர் முத்தையன், மாவட்ட நிர்வாகக்குழு அன்பு ஆகியோர் கண்டன உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில் குமார் ,குப்புசாமி, ஏழுமலை ,ஜெயராமன் ,ஜானகி, மகாதேவி, மாதேஸ்வரன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


You must be logged in to post a comment.