ஓடையை கடக்க முயன்ற 3 வயது சிறுவன் திடீரென வந்த வெள்ளத்தில் அடித்துச் சென்று உயிரிழப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு ராஜீவ்காந்தி நகர் பகுதியில் அருந்ததியர் காலணி அருகே உள்ள ஒடையை கடக்க முயன்ற மூன்று வயது சிறுவன் நீரில் அடித்து சென்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுதீத்தாண்டபட்டு ராஜீவ்காந்தி நகர் அருந்ததியர் காலனியை சேர்ந்த தாமோதரன் ரேகா தம்பதியரின் மூன்று வயது குழந்தை சற்குணன் அருகே உள்ள ஓடையை கடந்து சென்று விளையாடி விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல ஓடையை கடக்க முயன்ற போது ஜவ்வாது மலை அடிவாரத்தில் பெய்த கனமழையால் ஓடையில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதுஇதனை அரிந்துக் கொள்ள முடியாத குழந்தை சர்குணனை வெள்ள நீர் சட்டென அடித்து சென்றுள்ளது நீண்ட நேரமாக குழந்தை காணாமல் உள்ளதை கண்டு ஓடை அருகே சென்று பார்த்தபோது குழந்தை மிதந்து கிடந்தது தெரியவந்துள்ளதுகுழந்தையை மீட்ட அப்பகுதி மக்கள் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அப்போது குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர் பிறகு வீட்டிற்கு எடுத்து சென்ற உறவினர்கள் குழந்தையின் உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்அப்போது அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்றத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ஓடை அமைத்து தருவதாக கூறிய ஊராட்சி மன்ற தலைவர் உட்பட அனைவரும் ஏமாற்றி விட்டதாக கூறி இதுவரை தரை பாலம் அமைத்து தராததை கண்டித்தும் உடனடியாக தரைப்பாலம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறி இறந்த சற்குணனின் உடலை செங்கம் – வலசை சாலையில் வைத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுபின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி மாவட்ட இணை இயக்குனர் லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரத்தில் ஈடுபட்டு தரைப்பாலம் அமைக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என கூறிவருகின்றனர் சாலை மறியல் போராட்டமானது சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருவதால் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!