செங்கம் அருகே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது அதிக கட்டணம் வசூலிக்க படுவதாக பெற்றோர்கள் புகார். 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு பெருங்குளத்தூர் பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆண் பெண் என இருபாலரும் பயின்று வருகின்றனர் இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று அதிகரித்து வந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதனடிப்படையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டதால் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது இந்நிலையில் பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கைக்காக 9 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை 200 முதல் 300 வரை கட்டணம் வசூலிப்பதாகவும் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 350 முதல் 380 வரை கூடுதலாக சேர்க்கை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர் இதனடிப்படையில் பள்ளிகளுக்கு  சேர்க்கை கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வெளியே உள்ள வராண்டாவில் மண்டியிட்டு அவர்களை தண்டித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது இந்நிலையில் மாணவர் சேர்க்கையின் போது பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மாணவர்களிடமிருந்து 50 முதல் 100 வரை சேர்க்கை கட்டணமாக வசூல் செய்து பள்ளிகளில் கூடுதலாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியமாக வழங்குவது வழக்கம் ஆகும் ஆனால் வழக்கத்துக்கு மாறாக 350 முதல் 380 வரை வசூல் செய்து வருவது மாணவர் மற்றும் பெற்றோரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது  அரசுக்கு தெரிந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்து வருகிறார்களா அல்லது தெரியாமல் ஆசிரியர்கள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறார்களா என மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!