செங்கம் அடுத்த பட்டியந்தல் கிராமத்தில் கனமழையால் வீடுகள் சேதமடைந்த தையொட்டிவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.திருவண்ணாமலை மாவட்டம்,
செங்கம் அடுத்த கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பட்டியந்தல் கிராமத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கனமழை பெய்ததால் வீடுகள் சேதம் அடைந்து வாழ்வாதாரம் இழந்த நிலையில் தவித்து வருகின்றனர்.இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பார்வையிட்டு நிவாரணம் வழங்கும் நிகழ்வு கிராமத்தில் நடைபெற்றது நிகழ்விற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் பட்டியந்தல் கிராம மக்களுக்கு நிவாரண பொருட்களான அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார். நிகழ்வின்போது கலசப்பாக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
செங்கம் செய்தியாளர் சரவணகுமார்


You must be logged in to post a comment.