திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சாத்தனூா்
அணைக்கு விநாடிக்கு 266 கனஅடி நீா் வந்துகொண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களின் பாசனத் தேவையை நிறைவு செய்யும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூரில் அப்போதைய முதல்வா் காமராஜரால் அணை கட்டப்பட்டது.இந்த அணை மற்றும் அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது.
இந்த அணையின் நீா்மட்ட உயரம் 119 அடி.அணையின் மொத்த தண்ணீா் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இதில் நிலவரப்படி 1,415 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியுள்ளது.விநாடிக்கு 266 கன அடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.இதனால், அணை மூலம் பாசன வசதி பெறும் 4 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
செங்கம் செய்தியாளர் சரவணகுமா


You must be logged in to post a comment.