கும்பகோணம் தீவிபத்து: பலியான குழந்தைகளுக்கு 17 ஆண்டு நினைவஞ்சலி மற்றும் விதைப் பந்துகள் இடும் நிகழ்வு.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கற்க கசடற கல்விக் குழு சார்பில் கும்பகோணம் தீவிபத்தால் 2004 ல் பலியான 94 பள்ளி குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் நினைவாக 94 விதைப் பந்துகள் வந்தவாசி பகுதிகளில் மண்டல துணை வட்டாட்சியர் அகத்தீஸ்வரன், வழக்கறிஞர் இரா. மணி ஆகியோர் தலைமையில் வீசப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் குழுவின் செயல் தலைவர் மலர் சாதிக் தலைமை வகித்தார். நிறுவனர் இரா. பாஸ்கரன் வரவேற்றார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க பொறுப்பாளர் மு. பிரபாகரன், எக்ஸ்னோரா கிளை செயலாளர் கு. சதானந்தன், குழு இயக்குநர் ராகுல், துணைத் தலைவர் பரிதா பானு ஆகியோர் மறைந்த குழந்தைகளின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இறுதியில் குழு செயலாளர் மனோஜ்குமார் நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!