திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருக்கு நிர்வாகிகள் வாழ்த்து.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டதை அடுத்து அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அஇஅதிமுக தலைமைக் கழகம், திருவண்ணாமலை, போளூர், செங்கம், கீழ்பெண்ணாத்தூர் ,ஆகிய 4 தொகுதிகளுக்கு முன்னாள் வேளாண் துறை அமைச்சரும் , கழக விவசாய பிரிவு செயலாளருமான அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி மாவட்டக் கழகச் செயலாளராக அறிவித்தது. இதனைத்தொடர்ந்து செங்கம் ஒன்றிய நகர கிளை சார்பாக செங்கம் உன்னால் நகர கழக செயலாளரும், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவருமான கே.கே.மணி மாவட்ட செயலாளருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்வின்போது செங்கம் முக்கிய நிர்வாகி மேல் பெண்ணாத்தூர் கிளைக் கழக செயலாளர் ஏழுமலை உடன் இருந்தார். மற்றும் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி தலைவரும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவருமான எஸ்.வெங்கடாஜலபதி புதியதாக நியமிக்கப்பட்டு உள்ள திருவண்ணாமலை தெற்;கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன்செங்கம் மகரிஷி பள்ளி தலைவர் சி.மனோகரன், புதுப்பாளையம் ஒன்றியக்குழு துணை தலைவர் சசிகலா உதயசேகரன் , ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் தனஞ்செயன், நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்க துணை தலைவர் கோபி, இயக்குனர் சாலம்மாள் ராஜா ,ஊராட்சி மன்ற உறுப்பினர் சுரேஷ் கிளை கழக நிர்வாகிகள் ஏழுமலை ,முத்து, ராமஜெயம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பச்சையப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!