திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 39 வார்டுகளிலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நகராட்சி நிர்வாகம் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்காக நகரில் உள்ள 39 வார்டுகளுக்கும் மருத்துவ குழுவினர் சென்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்கின்றனர். இக்குழுவினரை வார்டுகளுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோவில் தெருவிலுள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது.மருத்துவ குழுவினரை அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தடுப்பூசி செலுத்தும் முகாமினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது¸திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 100 சதவீதம் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதியில் 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஆனால் இதுவரை 32 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இன்னும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மக்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளது.திருவண்ணாமலை:தடுப்பூசி போடாதவர்கள் 80ஆயிரம் பேர்நகராட்சி பகுதியில் நடைபெற்றற தேர்தலின்போது காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிகளுக்கு சென்று மாலை வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தியதுபோல நகராட்சி பகுதியிலுள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதற்காக நகராட்சி பணியாளர்கள் தன்னார்வலர்கள் மூலம் வீடுவீடாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.நகராட்சி பகுதியில் தடுப்பூசி முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும். விடுமுறை நாட்களான சனி¸ ஞாயிறு ஆகிய தினங்களிலும் சிறப்பு தடுப்பூசி போடும் முகாம் நடைபெறும். நேற்று முன்தினம் 1800 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 800 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மக்களிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் குறைவாக உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே உயிரைக் காக்க ஒரே தீர்வு எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் இரா.சந்திரா¸ கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல்¸ தாசில்தார் பி.வெங்கடேசன்¸ சுகாதார நலப்பணிகள் உதவி திட்ட மேலாளர் டாக்டர் விஜய்ராமன்¸ மருத்துவ அலுவலர் ஜெ.விஜய்ஆனந்தன்¸ நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பிரட்¸ வினோத் கண்ணா¸ மற்றும் மருத்துவர்கள்¸ செவிலியர்கள்¸ மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









