திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட காந்திபுரம் மற்றும் குட்டை ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் இணை உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு பெண்ணாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜய் தலைமை தாங்கினார் பள்ளித் தலைமையாசிரியர் காந்திமதி மற்றும் இஸ்மாயில் ஆகியோர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
ஊராட்சி மன்ற துணை தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குப்பன் முன்னிலை வகித்தார்.செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆலோசனையின் படி, மேல்பெண்ணாத்தூர்ஊராட்சி மன்ற தலைவர் விஜய் ஊராட்சிக்குட்பட்ட காந்திபுரம் மற்றும் குட்டை ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் இணை உணவுப் பொருட்கள் வழங்கினார். அப்போது, பொதுமக்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்து, முக கவசம் அணியும் முறை விளக்கிக் கூறினார். நிகழ்வில் ஊராட்சி எழுத்தர் ஏழுமலை , சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தி , திமுக கழக நிர்வாகிகள் செல்வம் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
இதேபோல், செங்கம் அடுத்த அமர்நாத் புதூர் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் இணை பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூமல்லி சடையாண்டி தலைமை தாங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் அனைவரும் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் முன்னிலை வகித்தனர். அமர்நாத் புதூர் ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பூமல்லி சடையாண்டி சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவர்களுக்கு உலர் இணை உணவுப் பொருட்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தர்மன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செங்கம் செய்தியாளர் சரவணகுமார்


You must be logged in to post a comment.