திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கோரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் அனைத்தும் 2 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட நிலையில், சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கோரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், அர்ச்சகர்கள் மட்டும் ஆகம விதிகளின்படி சுவாமிக்கு பூஜைகளை நடத்தி வந்தனர்.இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் பக்தர்கள்சுவாமி தரிசனம் செய்யலாம் என்றுதமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து கோயில்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதையடுத்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் த திறக்கப்பட்டு, பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றி அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன.கோயில்களில், கோரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தொடங்கினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!