வந்தவாசியில் சுவாமி விவேகானந்தரின் நினைவு தினம் .

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் நினைவு தினம் கல்வி மைய வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுகோல்கள் வழங்கப்பட்டது. மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள், புடவைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார். சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் ம. சுரேஷ் பாபு முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு தமிழ்ச் சங்க தெள்ளார் வட்டார தலைவர் பா. சுரேஷ் அவர்கள் பங்கேற்று, விவேகானந்தரின் வீரச் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை பகிர்ந்தார். மேலும் இந்த நிகழ்வில் கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ. கேசவராஜ், இரயில்வே துறை அதிகாரி தனசேகரன், ஜோதிட ஆசிரியர் ஆர். சங்கரநாராயணன், கவிஞர் தமிழ் ராசா, கவிஞர் சு. அகிலன் ஆகியோர் சுவாமி விவேகானந்தர் என்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சிறப்பாசிரியர் கு. சதானந்தன் நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!