ஜமுனாமரத்தூர் பட்டறைகாடு வன பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான ஊறல்களைக் வனக்காவலர்கள் கண்டறிந்து அழித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் வனச்சரக பகுதியில் சுமார் 250 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் 200 கிலோ வெல்லம் மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பொருட்களை ரோந்து பணியில் ஈடுபட்ட வனச்சரக அலுவலர்கள் அழித்தனர்.திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லால் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஜமுனாமரத்தூர் வனச்சரக அலுவலர் குணசேகரன் வழிகாட்டுதலின்படி வனவர் பாண்டுரங்கன் கணேஷ் தலைமையில் வனக் காப்பாளர்கள் ராமதாஸ், ராஜிமுத்து, ராம்குமார் ராஜேஷ்குமார் குழந்தை மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜிமருத்தூர் கிராமம் அருகில் உள்ள பட்டறை காடு வனப்பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டபோது கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் கள்ளச் சாராய ஊறல் 200 கிலோ வெல்லம் மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பொருட்களை தீ இட்டு அழித்தனர்.இதனைத் தொடர்ந்து வனச்சரக பகுதியில் இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் நடப்பதால் தீவிர ரோந்து பணி மற்றும் சட்ட விரோத செயல்களை செய்யும் சட்ட விரோதிகளை வனச்சரக அலுவலர்கள் மற்றும் வனக்காவலர்கள் தேடி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!