ஆரணியில் 18ம் நூற்றாண்டில் கட்டபட்ட கண்ணாடி மாளிகை சமூக விரோதி கூடாரமாக இருந்ததை 70ஆண்டுகளுக்கு பின்பு வனத்துறையினர் மீட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பூசிமலைக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள 1806ம் ஆண்டு திருமலை ராவ் தன்னுடைய காதல் மனைவிக்காக கட்டபட்ட இந்த கண்ணாடி மாளிகை தற்போது 215 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன.மேலும் கடந்த 70ஆண்டுக்கு மேலாக வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் கட்டுபாட்டில் இயங்கி வந்தன.சமீப காலமாக ஆரணி பகுதியில் உள்ள சில சமூக விரோதிகள் மது அருந்துவது சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோதிகள் செயல்கள் ஈடுபட்டு வந்தனர்.மேலும் தற்போது வனத்துறை அதிகாரி அருண்லால் சரக வன அலுவலர் மோகனகுமார் ஆகியோர் பூசிமலைகுப்பம் காப்பு காட்டில் ஆய்வு செய்த போது ஜாகிர்தாரர் கட்டபட்ட கண்ணாடி மாளிகை இடம் வனத்துறைக்கு சொந்தமான இடம் என்று தெரியவந்தது.இதனையொடுத்து மாவட்ட ஆட்சியிரிடம் முறையிட்டு வனத்துரையினர் சுமார் 70ஆண்டுகளுக்கு பின்பு கண்ணாடி மாளிகையை மீட்டு எடுத்தனர்.மேலும் ஆரணி சரக வனத்துறையினர் கண்ணாடி மாளிகையை சுற்றி வேலி அமைத்து வனத்துறைக்கு சொந்தமான இடமான அறிவிப்பு பலாகை வைத்துள்ளனர்.அதனையொடுத்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களின் கோரிக்கையாக விளங்குவது : ஆரணி புரதான சின்னமாக விளங்கும் பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகையை சமூக விரோதிகளிடம் இருந்து மகிழ்ச்சியளிக்கின்றன இருப்பினும் தமிழக அரசு உடனடியாக தலையீட்டு இந் கண்ணாடி மாளிகையை சுற்றுலா தலமாக மாற்றி அமைத்து பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆரணியில் உள்ள சமூக ஆர்வலர்கள் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளன

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!