செங்கத்தில் கணவனின் தம்பி அடிக்கடி மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவனின் தம்பியை அரிவாளால் வெட்டி கொலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் லாரி ஓட்டுனராக இருந்து வருகிறார் இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் இந்நிலையில் ராஜா மது போதைக்கு அடிமையாக இருந்து வந்துள்ளார் இந்நிலையில் ராஜா உடன் பிறந்த அண்ணன் செல்வம் என்பவரும் லாரி ஓட்டுனராக இருந்து வருகிறார் இவர்கள் ஒரே குடும்பத்தில் வசித்து வந்ததால் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்துள்ளார் இந்நிலையில் ராஜா வீட்டினில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக செங்கம் காவல்துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்டிருந்தது புகாரின் அடிப்படையில் விரைந்து சென்று செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவரது அண்ணன் மனைவி பராசக்தி போலீசாரிடம் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார் இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர் அப்போது போலீசார் விசாரணைக்கு பயந்து பராசக்தி ராஜா தனது கணவர் இல்லாத போது மதுபோதையில் வீட்டிற்கு வந்து என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தாலும் அடிக்கடி இதேபோன்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் இரவு என்னிடம் தவறாக நடக்க முயன்ற போது அவரை பிடித்து தள்ள முயன்றதில் கீழே விழுந்தார் இதனால் தன்னை ஏதாவது செய்து விடுவார் என்ற அச்சத்தில் தற்காப்பிற்காக அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார் அதன்பிறகு பராசக்தியை கைது செய்த செங்கம் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் மதுபோதையில் அண்ணன் மனைவி என்றும் பாராமல் தவறாக நடக்க முயன்றதால் ராஜா என்பவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!