செங்கம் பகுதியில் போக்குவரத்து பிரச்சினைகளால் பள்ளி பள்ளி ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகினர் .

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மதிப்பெண் கணக்கிற்கான ஆவண தகவல் திரட்டுதல் உள்ளிட்ட பணிகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் ஊழியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டியுள்ளது ஆனால் போக்குவரத்து பிரச்சினைகள் பலரும் அவதிக்குள்ளாகினர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை தொடக்க நிலை அனைத்து தரப்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றனர். ஆனால் பல பகுதிகளில் ஆசிரியர்கள் போக்குவரத்து வசதியில்லாத இல்லாத நிலையில் செல்ல பெரும் அவதிக்குள்ளாகினர் .இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்த ஆசிரியர்களும் போக்கு வரத்து குறைவான வனப்பகுதி வெறிச்சோடிய சாலைகளில் பெண் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் பயணம் மேற்கொள்வது அவர்களது உயிருக்கு, உடமைக்கு, மானத்திற்கும், கேடு ஏற்படும் அச்சம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும் சில பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை பள்ளிப் பணிகளில் ஈடுபட்டனர் . அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு செல்ல இதயம் துடிக்கின்றது ஆனால் ஆசிரியர்கள் அச்சப்படுகின்றனர். ஆசிரியர்கள் தங்களது அரசு அடையாள அட்டை காண்பிக்க செய்து அவர்களுக்கான பயணத்துடன் அரசு போக்குவரத்து வசதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற் படுத்தி தந்தால் நன்மை தரும் என்று தெரிவிக்கின்றனர். தமிழக அரசு விதிக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகத்திற்கு ஆசிரியர் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!