திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடி பகுதியிலுள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நூற்றுக்கணக்கான புளியமரங்கள் அரசால் வைக்கப்பட்டிருந்தன தற்பொழுது பெங்களூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது நிறைய மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட நிலையில் தற்போது தோக்கவாடி முதல் செங்கம் வரை புளிய மரங்கள் வெட்டப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது சிலர் சுயலாபத்திற்காக பட்டப்பகலில் மரம் அறுக்கும் இயந்திரங்களை வைத்து சாலையில் உள்ள மரங்கள் மற்றும் பெரிய மரங்களின் கிளைகளை அறுத்து சுயலாபத்திற்காக விற்பனை செய்து வருகின்றனர் தற்போது கொரோனா சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் ஆக்சிஜன் தரும் மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி வருகின்றனர் இதனைப்பற்றி செங்கம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தொடர்ந்து புளிய மரங்களை வெட்டி கடத்திய வரும் சூழல் ஏற்பட்டு வருகிறது புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மரம் வெட்டும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தைரியமாக பட்டப்பகலில் வெட்டி கடத்தி வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை ஓரங்களில் உள்ள மரங்களை காத்திட வேண்டும் என்று செங்கம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்


You must be logged in to post a comment.