திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
அடுத்த அரட்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் வயது 37. அரட்டவாடி கிராமத்தின் அருகாமையில் உள்ள விவசாய நிலத்தில் கிணறு தூர்வாரும் பணிக்கு சென்றுள்ளார் . சக்திவேல் தூர்வாரும் பணி செய்யும்போது திடீரென மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் வேலை செய்தவர்கள் அவரை மீட்டு அரட்டவாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். சக்திவேல் அரட்டவாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் இதையடுத்து அவரது உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசாரிடம் தெரிவித்தனர் இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன், காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் துணை ஆய்வாளர் இயேசுதாஸ் துணை ஆய்வாளர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தூர்வாரும் பணியில் ஈடுபட்ட அனைவரிடம் விசாரணை மேற்கொண்டனர் மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செங்கம் காவல்துறையினர் சம்பவத்தைக் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன


You must be logged in to post a comment.