திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேல் பாலூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அயோத்திதாச பண்டிதர் 176 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடும் விதத்தில் இந்நிகழ்ச்சியை மேல்பாலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் விசிக ஒன்றிய துணை செயலாளருமான த. ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. முகாம் செயலாளர் ராஜ் முன்னிலை வைத்தார் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பு. செல்வம், மற்றும் ஒன்றிய செயலாளர் சொ.இராஜா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மாஸ்க் , கபசுர குடிநீர் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு ,பேனா வாய்ப்பாடு இளைஞர்களுக்கு விளையாட்டு பொருட்கள் , புத்தகங்கள் வழங்கினார்.
மாவட்ட செயலாளர் பு. செல்வம் பேசுகையில் பொதுமக்கள் அனைவரும் கரோணா தொற்றிலிருந்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். தமிழக அரசு மூலம் ஏற்படுத்துகின்ற தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக் கொண்டு தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்களும் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது மேல்பாலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளைக் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்


You must be logged in to post a comment.