திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வெங்கடம்பாளையம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்றத் தலைவர் உண்ணாமலை பழனி தலைமையில் நடைபெற்றது ஊராட்சி மன்ற துணை தலைவர் முன்னிலை வகித்தார்.கலசபாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம் ராம் மருத்துவர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பின்னர் மருத்துவ அலுவலர் கௌதம் ராம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் அவர் பேசுகையில்;
கரோனா தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்று தான் நமக்கு கிடைத்த பெரிய வரம். தடுப்பூசி கண்டுபிடித்த உடன் மக்களுக்கு செலுத்தப்படவில்லை. பல கட்ட ஆய்வுக்குப் பிறகே அது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் பெரிய பாதிப்பில் இருந்து எளிதாக தப்பிக்கலாம்.தனியார் மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையில் போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக போடப்பட்டு வருகிறது. இலவசமாக கிடைக்கும் எதற்கும் மதிப்பு இருக்காது என்பதை போல இலவசமாக போடப்படுகின்றது .தமிழக அரசு மூலம் நடைபெறும் தடுப்பூசி முகாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.சிறப்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாமில் வெங்கடம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து நிறுத்திக் கொண்டனர்.முகாமில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஊராட்சி எழுத்தர் வெங்கடேசன் கிராம நிர்வாக அலுவலர் மருத்துவ குழுவினர் சுகாதாரத் துறையினர் செவிலியர்கள் கற்பகம், சென்னம்மாள், மீனா, பொதுமக்கள் என கலந்து கொண்டன


You must be logged in to post a comment.