திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தேவராயன் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா செல்வம் தலைமையில் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமில் கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதமன் தலைமையில் மருத்துவர் விக்னேஷ் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தேவராயன் பாளையம் கிராமத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தடுப்புசி செலுத்தி கொண்டனர். தேவராயன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா செல்வம் தடுப்பூசி செலுத்தி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முகாமில் மருத்துவ குழுவினர் செவிலியர் கற்பகம் சென்னம்மாள் மீனா பொதுமக்களை பரிசோதனை செய்து துணை தலைவர் லட்சுமி துரைக்கண்ணு ஊராட்ச எழுத்தாளர் நாராயணசாமி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்


You must be logged in to post a comment.