திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பசும்பாலை தரையில் ஊற்றி கவன ஈர்ப்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு
விவசாயிகள் சங்கம் தலைவர் குமரன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க துணைத்தலைவர் அருணாச்சலம், பாபு முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் சங்கத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் சர்தார், ஏஐடியூசி மாவட்ட தலைவர் முத்தையன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்தினர்.ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்களிடம் பசும்பாலுக்கு லிட்டருக்கு கொள்முதல் விலை ரூ.35 நிர்ணயம் செய்திடவும், கறவை மாடுகளுக்கு இலவச இன்சூரன்ஸ்j செய்திடவும், தரமான பாலை உற்பத்தியாளர் சங்கங்களிடம் வழங்கிடவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பள்ளிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ,சிறு விவசாயிகள் அங்கத்தினர் பசும்பாலை தரையில் ஊற்றி கவனய ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாய சங்க பொருளாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செங்கம் செய்தியாளர் சரவணகுமார்


You must be logged in to post a comment.