திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப்புற வட்டார பகுதிகளில் 12 முதல் 14 வயது வரையிலான அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கும், கடந்த 03.01.2022 முதல் அனைத்து நாட்களிலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள சிறார்களுக்கு மருத்துவ குழு மூலம் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து ங்கம் மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் . கு.ராஜேந்திரன், செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் உத்தரவின் பேரிலும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி செங்கம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளி 12 வயது முதல் 14 வயதுவரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் குழு மூலம் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கல்வித்துறை சார்பில் வட்டார கல்வி அலுவலர் உதயகுமார் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதேபோல் மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளித் தலைமையாசிரியர் ஜெயந்தி தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி மருத்துவ குழு செவிலியர் கலைச்செல்வி மற்றும் சுகாதார பணியாளர்கள் மூலம் சிறப்பாக நடைபெற்றது.


You must be logged in to post a comment.