திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த அருணகிரி மங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வித்தியா பிரசன்னா தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கலசபக்கம் சுற்றுப்புற வட்டாரப் பகுதியில் நாளுக்கு நாள் குரானா தொடர் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தரவின் பேரில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மருத்துவக் குழு அருணகிரி மங்கலம் கிராமத்தில் தடுப்பூசி முகாம் பணியை மேற்கொண்டனர்.இம்முகாமில் அருணகிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 60 நபர்கள் ஆர்வமுடன் எவ்வித அச்சமுமின்றி தாமாக முன்வந்து கொரனோ தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.முகாமில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கீதா நாராயணசாமி,செவிலியர் காந்திமதி, சுப பிரியா ,மல்லிகா மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


You must be logged in to post a comment.