திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சோழவரம் கிராமத்தில் கொரானா வைரஸ் தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தமிழ் பாரதி தலைமையில் நடைபெற்றது.
கலசப்பாக்கம் பகுதியில் நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மருத்துவ குழுவினர் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் இதை தொடர்ந்து கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம் ராம் உத்தரவின் பேரில் மருத்துவர் தேன்மொழி தலைமையில் மற்றும் மருத்துவ குழுவினர் சுகாதாரத்துறையினர் முகாம் பணிகளை மேற்கொண்டனர் சோழவரம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். நிகழ்வில், கலசப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ஆலோசனையின்படி ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தமிழ் பாரதி, ஊராட்சி மன்ற துணை தலைவர் மாலதி விக்ரம், ஊராட்சி செயலாளர் கிராம நிர்வாக அலுவலர் நித்தியா விடுதலை ெ சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழரசன் , விலியர் கிரிஜா மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்


You must be logged in to post a comment.