செங்கம் அருகே 816மதுபான பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடை மூடப்பட்டு உள்ளது இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கர்நாடகா மாநிலத்திலிருந்து பாக்கெட் மதுபானங்கள் அதிக அளவில் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு அதிக லாபம் ஈட்டி வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஆனந்தவாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில் மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட டாட்டா ஏசி 1 அதிவேகமாக வந்து கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அதனை தடுத்து ஓட்டுநரிடம் விசாரணையில் ஈடுபட்டனர் அப்போது போலீசாரின் விசாரணையில் முன்னுக்கு பின்னாக ஓட்டுனரின் பதில் இருந்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வாகனத்தை தீவிரமாக சோதனை செய்தனர் அப்போது டாட்டா ஏசி வாகனத்தின் மேற்கூரையில் சுமார் 816 கர்நாடக மாநில பாக்கெட் மதுபானங்கள் இருந்ததை கண்ட காவல்துறையினர் மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ஓட்டுனரை கைது செய்தனர் அதன்பிறகு கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்த மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் மேல்செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர் அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சங்கமம் கொள்ளை பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மது பான பாக்கெட்டுகளை கொண்டு சென்று அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய எடுத்த வந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அஜித் மீது வழக்குப்பதிவு செய்து மேல்செங்கம் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சோதனைச் சாவடியில் இதுபோன்று மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தது இதுவே முதல் ஆகும்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!