திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் விளையும் பூக்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாததால், பூந்தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புகின்றனர் விவசாயிகள். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள, 25க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாயிகள் பிரதானமாக
பூக்களை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும், முல்லை, மல்லி, பன்னீர் ரோஜா, காக்கட்டான், சாமந்தி, ஜம்பங்கி, உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் நாள் ஒன்றுக்கு, 10 டன் அளவில் விளைகிறது. பூக்கள், பெங்களூர் மற்றும் சென்னை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கால், பூக்களை பெங்களூரு உள்ளிட்ட வெளிபகுதிகளுக்கு அனுப்பி வைக்க முடியாததால், பூக்களை பறிக்காமல் செடியிலேயே அப்படியே விட்டுள்ளனர். விவசாயிகள் மிகவும் நஷ்டம் அடைந்து மிகவும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்


You must be logged in to post a comment.