கடலாடி கிராமத்தில் தடுப்பூசி முகாம்;ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.கலசபாக்கம் வட்டாசியர் அமுலு ,வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி , வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து முகாமை பார்வையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதைத்தொடர்ந்து கலசபாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம் ராம் உத்தரவின்பேரில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தலைமையில் மருத்துவ பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், கடலாடி கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து கிராமத்தைச் சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர் . துணை தலைவர் சாமூன்டேஸ்வரி தமிழ்செல்வன் ஒன்றிய குழு உறுப்பினர் சென்னன் ஊராட்சி செயலாளர் செந்தில் ஊராட்சி உறுப்பினர் புகழ்அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் பொதுமக்களிடம் தமிழக அரசு ஏற்படுத்தித் தருகின்ற வைரஸ் நோய் தடுப்பு முகாமை பொதுமக்கள் இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!