திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் வட் டார மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து செங்கம் கணேசர் திருமண மண்டப வளாகத்தில் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி மக்களுக்கான 18 வயது
மேற்பட்ட 44 வயதுக்குட்பட்ட பொதுமக்களுக்கு கொரானா வைரஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது தடுப்பூசி முகாமிற்கு செங்கம் வட்டாட்சியர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் கே.சரவணகுமரன் மற்றும் கணேசர் குழும தலைவர் வழக்கறிஞர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். செங்கம் பகுதிவாழ் மக்கள் இளைஞர்கள் இரண்டு மாதமாக விழிப்புணர்வு இல்லாத நிலையில் தடுப்பூசி பிரித் செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டி வந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் இளைஞர்கள் பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்துகொண்டு தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் . வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் உனக்காக மருத்துவ பரிசோதனை பணிகளை மேற்கொண்டனர் . கிராமப்புறங்களில் உள்ள ஏழு இளையோர் இந்த சிறப்பு முகாமை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தற்போது பயன்படுத்தினால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அல்லது திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அலைய வேண்டிய நிலை இருக்கும் எனவே அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வரவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது; அரசு பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தருகின்ற தடுப்பூசி முகாமை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் எந்தவித அச்சப்படத் தேவையில்லை விழிப்புணர்வோடு செயல்பட்டு சமுதாயத்தை வளமாக்குவோம் என்று கருத்தை தெரிவித்து வருகின்றன


You must be logged in to post a comment.