கடலாடி அரசு மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி முகாம்; சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

செங்கம் அடுத்த கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.இப்பணியை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு. தி.சரவணன் ஆய்வு மேற்கொண்டு, 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கான பழுதடைந்த குடியிருப்பு பகுதி மற்றும் மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டு , அடிப்படை வசதிகளை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்

கலசபாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம் ராம் தலைமையில் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி மதுமிதா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் சுகாதாரத் துறை மற்றும் பணியாளா்கள் நோய்குறி அணுகுமுறை திட்டத்தில் பொதுமக்களுக்கு பல்ஸ் ஆக்ஸோ மீட்டா் மூலம் பரிசோதனை செய்தனர். பின்னர் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்

கலசபாக்கம் ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், வழக்கறிஞர் சுப்பிரமணி, ஆறுமுகம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சென்னன் , தணிக்கைவேல் ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா மாவட்ட பிரதிநிதி முருகையன் மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணராஜ், ஜெயபிரகாஷ் , வெங்கடேசன் , அன்பரசு, முருகையன், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!