திருவண்ணாமலை மாவட்டம் திருவூடல் வீதியில் வசித்து வரும் மோகன் குமார்-ஞான சவுந்தரி தம்பதிக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஞானசம்மந்தம் 12ஆம் வகுப்பும், இளைய மகன் மாணிக்கவாசகன் 6ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக ரிமோட் கார் வாங்க உண்டியலில் பணம் சேமித்து
வந்துள்ளனர்.இந்நிலையில், தங்களது சேமிப்பு பணத்தை கரோனா தடுப்பு பணிக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க விரும்புவதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, சிறுவர்கள் இருவரும் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று(மே.18) சைக்கிளில் சென்றனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து, உண்டியல் சேமிப்பு பணம் ரூ.1,400-ஐ வழங்கினர்.சிறுவர்கள் அளித்த நிவாரண நிதியைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அவர்களை பாராட்டினார்.இதுகுறித்து மாணிக்கவாசகன் கூறுகையில், “கரோனா இரண்டாம் அலை பாதிப்பால், மக்கள் ஆக்ஸிஜன் இன்றி உயிரிழக்க நேரிடுகிறது. தொலைகாட்சியில் கரோனா நிவாரண நிதி கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் எனக் முதலமைச்சர் கோரிக்கை விடுத்ததை பார்த்தோம். அதனால் ரிமோர்ட் கார் வாங்க சேமித்து வைத்த 1400 ரூபாயை கரோனா நிதிக்கு வழங்கியுள்ளோம்” என்றார்.


You must be logged in to post a comment.