திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பட்டியந்தல் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தரவின்பேரில் கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தேன்மொழி தலைமையில் கடலாடி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த 40 நபர்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார் இம்முகாமில்ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி ஏழுமலை, கிராம நிர்வாக அலுவலர் மேகநாதன், மருத்துவ குழு சார்பில் செவிலியர் காந்திமதி, கீர்ஜா, மருந்தாளர் சரவணன், ஊராட்சி செயலர் சக்திவேல் முக்கிய பிரமுகர் கலந்து கொண்டனர்


You must be logged in to post a comment.