திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா 2வது அலை தினமும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இறப்பும் அதிகரித்து வருகின்றது இதனைத் தொடர்ந்து செங்கம் பகுதியிலும் நன்றாக குறைந்து வந்த பாதிப்பு மீண்டும் எகிறுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டியதாலும். கடை வீதிகள், பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவதை மேலெல்லாம் தவிர்த்த நிலை, . சமூக இடைவெளி இல்லாமல் போனது. தொடர்பான வழக்கு முக்கிய காரணமாக உள்ளதுமேலும்கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்யும் கலாசாரத்துக்கு விடை கொடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் தொடர்ந்த இந்த அலட்சியம் கொரோனா 2வது அலைக்கு வித்திட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செங்கம் வட்டார மருத்துவர் சுரேஷ் மற்றும் நடராஜன், மருத்துவ பணியாளர்கள்செங்கத்தில் உள்ள அனைத்து கடை உரிமையாளர்களிடமும் இடமும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வியாபாரம் செய்யும் வாடிக்கையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவை குறித்தும் இடையில் கயிறு கட்டி பாதுகாப்பு ஏற்படுத்தி பொருட்களை வழங்கவும் வலியுறுத்தி எச்சரிக்கை செய்தனர் . மேலும் செங்கம் நகர பொதுமக்களுக்கு தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நோய் வந்த பிறகு காப்பதை விட முன்னெச்சரிக்கையாக நடப்பது தான் புத்திசாலித்தனம். முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றுவதில் கூடுதல் கவனம் தேவை,’ என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஈடுபட்டனர்


You must be logged in to post a comment.